பாலிவுட் சினிமாவில் அடுத்தடுத்து பெரிய பிரபலங்களின் திருமணம் நடக்க இருப்பதாக தெரிகிறது. சோனம் கபூரின் திருமணம் படு பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அடுத்து நடிகை தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங்கின் திருமணம் வரும் நவம்பர் மாதம் 20ம் தேதி இத்தாலியில் நடைபெற இருப்பதாக செய்திகள் வந்துவிட்டன.
அடுத்து பிரியங்கா மற்றும் நிக் ஜோன்ஸ் திருமணத்தை பற்றிய தெரிந்துகொள்ள தான் ரசிகர்கள் ஆர்வம். அவர்களுக்கு ஏற்கெனவே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்ற பேச்சு இருக்கிறது. அதற்கு ஏற்றார் போல் பிரியங்காவின் கையில் ஒரு மோதிரம் சமீபத்தில் காணப்படுகிறது.
அதுதான் அவரின் நிச்சயதார்த்த மோதிரம் என்றும் ரூ. 2.1 கோடி மதிப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.