கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் ரெனிஸ் திருவிழா பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.
கலப்பு இரட்டையர் முதலாவது சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ்- சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட் கண்க்கில் Anna-LenaGroenefeld (ஜேர்மனி), Robert Farah (கொலம்பியா) இணையை வென்று இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றது.
இதே போல் பெண்கள் இரட்டையரில் ‘நம்பர் ஒன்’ கூட்டணியான இந்தியாவின் சானியா மிர்சா- சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ங்கிஸ் ஜோடி 7-6 (7-4), 6-2 என்ற நேர் செட் கணக்கில் டாரியா கசட்கினா- அலெக்சாண்ட் ராபனோவா (ரஷியா) இணையை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றது.
ஆண்கள் இரட்டையர் முதலாவது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ருமேனியாவின் புளோரின் மெர்கா இணை 6-2, 6-2 என்ற நேர் செட்டில் ராபர்ட்- சிடோரென்கோ (பிரான்ஸ்) ஜோடியை வீழ்த்தியது.
லியாண்டர் பெயஸ்(இந்தியா)- மார்சின் மேட்கவ்ஸ்கி (போலந்து) ஜோடி 7-6 (7-3), 7-6 (8-6) என்ற நேர் செட்டில் இஸ்தோமின் (உஸ்பெகிஸ்தான்)- புரி (பெலாரஸ்) இணையை வென்றது.