பிரேசில் நாட்டு கிரேக்க தூதர் காரில் துடி துடிக்க எரித்துக் கொலை அதிர்ச்சி தரும் காரணம்!

213

பிரேசில் நாட்டு கிரேக்க தூதர் காரில் துடி துடிக்க எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டு கிரேக்க தூதராக பதவி வகித்து வந்தவர் Kyriakos Amiridis(59). இவர் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள கிரேக்க தூதரகத்தில் பணிபுரிந்தார்.

இவரது வீடு நோவா பகுதியின் இகுயாசூ நகரில் உள்ளது. இவர் எதிர்வரும் புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதற்காக ரியோ டி ஜெனிரோவில் இருந்து பிராசிலியாவின் Copacabana கடற்கரைக்கு காரில் சென்றுள்ளார்.

அப்போது அவரது மனைவி Kyriakos Amiridis க்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு உள்ளார். ஆனால் எந்த ஒரு பதிலும் வரவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது மனைவி பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனால் பொலிசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் Kyriakos Amiridis ரியோ டி ஜெனிரோ நகரில் தனது காருக்குள் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொலிசார் அவரது உடலை உடனடியாக அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி குடும்பத்தார்க்கு தகவல் கொடுத்துள்ளனர்.

மேலும் அவர் பிணைத் தொகைக்காக மர்ம கும்பலால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால் அது போன்று நடக்க வாய்ப்பில்லை என பொலிசார் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இவர் இறந்ததற்கான காரணம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE