பிறந்தநாளில் ஓடுறது, பறக்குறது என செம விருந்து போட்டுள்ள நடிகர் கமல்ஹாசன்

104

 

இந்திய சினிமா பெருமை கொள்ளும் நடிகர்களில் சிறந்து விளங்குபவர் நடிகர் கமல்ஹாசன். நடிப்பு அரக்கன், உலக நாயகன், ஏராளமான விருதுகளுக்கு சொந்தக்காரர் என இப்படி அவரை புகழ்ந்து கொண்டே போகலாம்.

கமல்ஹாசன் அரசியல், சின்னத்திரை, படங்கள் என பிஸியாக நிறைய வேலைகளை செய்து வருகிறார். இதற்கு இடையில் தான் நேற்று (நவம்பர் 7) கமல்ஹாசன் அவர்களின் 69வது பிறந்தநாள் படு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பிரபலங்களுக்கு இரவு பார்ட்டி வைத்துள்ளார், ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு அவருடன் புகைப்படம் எடுத்துள்ளனர்.

நடிகரின் விருந்து
அதேபோல் பிறந்தநாள் விருந்தில் பறப்பது, நீந்துவது என அனைத்து வகை அசைவ உணவு, பிரியாணி, ஜிகர்தண்டா, பரோட்டா என அரேபியன் முதல் ஆம்பூர் வரை அனைத்து வகையான உணவு வகையினையும் போட்டு அசத்தியுள்ளார்.

SHARE