பாகிஸ்தானில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது உட்கொண்ட இனிப்பில் நச்சு கலந்திருந்ததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 23 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள Karor Lal Esan எனும் பகுதியில் குடியிருந்து வந்த சஜ்ஜத் என்பவரது குடும்பம், அவரது மகனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை சிறப்பிக்க இனிப்பு வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த இனிப்பை உட்கொண்ட சஜ்ஜத் உள்ளிட்ட 23 பேர் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டனர்.
இதில் 23 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் 52 பேர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.