பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலய மாணவர்கள் உதைப்பந்தாட்டப் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு

161

கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற 12 வயதுக்குட்பட்ட உதைப்பந்தாட்டப் போட்டியில் பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலய மாணவர்கள் தங்களுடைய திறமையினை வெளிப்படுத்தி தேசிய ரீதியாக நடைபெறவுள்ள போட்டிக்கு தெரிவாகியுள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.யூ.எம்.இஸ்மாயில் தெரிவித்தார்.

மாகாணத்திலுள்ள பல முக்கியமான பாடசாலைகள் பங்குபற்றிய குறித்த உதைப்பந்தாட்டப் போட்டியில் பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலய மாணவர்கள் தேசிய மட்டத்தில் நடைபெறவுள்ள போட்டியில் பங்குபற்றுவதற்கு தெரிவு செய்யப்பட்டமை பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக அதிபர் தெரிவித்தார்.

அத்தோடு நடைபெற்ற போட்டிகளில் எம்.எஸ்.எம்.சஹி எனும் மாணவன் சிறப்பான முறையில் தன்னுடைய திறமையினை வெளிப்படுத்தி குறித்த உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் எட்டு கோல்களைப் புகுத்தியதோடு சிறந்த வீரனாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எனவே குறித்த சுற்றுப் போட்டியில் சிறப்பான முறையில் மாணவர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கு பயிற்சியளித்த பாடசாலையின் உடற் கல்வி ஆசிரியர் பீ.எம்.ஜாமில் கபூரி மற்றும் உதவியாளராக செயற்பட்ட எச்.எல்.எம்.றினோஸ் ஆகியோர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

SHARE