பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழ் நடிகர்கள், நடிகைகள் பட்டியல்

198
பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழ் நடிகர்கள், நடிகைகள் பட்டியல்
65-வது பிலிம்பேர் விருது விழாவிற்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழ் நடிகர்கள், நடிகைகள் பட்டியல் விவரம் :-
தேசிய விருதை அடுத்து திரையுலக நட்சத்திரங்கள் பெரிதும் மதிக்கும் விருதுகளில் ஒன்று பிலிம்பேர் விருதுகள். இந்த விருது விழங்கும் விழா ஓவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது இந்த ஆண்டு 65-வது பிலிம்பேர் விருது விழா வருகிற 16-ந் தேதி ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. இந்த விருதுக்காக பரிந்துரைக்கபட்ட   தமிழ் நடிகர் நடிகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சிறந்த படத்திற்கு  பரிந்துரைக்கப்பட்ட படங்கள் : அறம், அருவி, தரமணி,தீரன் அதிகாரம் ஒன்று, விக்ரம் வேதா.
 சிறந்த நடிகர்கள் பட்டியலில் பரிந்துரைக்கப்பட்ட நடிகர்கள், கார்த்தி (தீரம் அதிகாரம் ஒன்று ),மாதவன் (விக்ரம் வேதா), ராஜ்கிரண், விஜய் (மெர்சல்), விஜய் சேதுபதி (விகரம் வேதா).
சிறந்த நடிகைக்காக பரிந்துரைக்கப்பட்ட தமிழ் நடிகைகள்: அதிதி பாலன் (அருவி), அமலாபால் ( திருட்டுபயலே 2), ஆண்ட்ரியா(தரமணி), ஜோதிகா (மகளிர் மட்டும்), நயனதாரா (அறம்), ரேவதி(பவர் பாண்டி).
சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் பரிந்துரைக்கப்பட்ட இயக்குனர்கள்; அருண் பிரபு புருஷோத்தமன்( அருவி), அட்லி ( மெர்சல்), தனுஷ் ( பவர் பாண்டி), கோபி நயினார்( அறம்), வினோத் ( தீரன் அதிகாரம் ஒன்று), புஷ்கர் காய்த்ரி( விக்ரம் வேதா)
சிறந்த துணை நடிகர் (ஆண்)
அபிமன்யூ சிங்  – தீரன் அதிகாரம் ஒன்று
பிரசன்னா – திருட்டுபயலே-2
எஸ்ஜே சூர்யா – மெர்சல்
வினய்-துப்பறிவாளன்
விவேக் ஒபராய் – விவேகம்
சிறந்த துணை நடிகர் (பெண்)
அஞ்சலி வரதன் – அருவி
பானுப்பிரியா -மகளிர் மட்டும்
நித்யாமேனன் -மெர்சல்
ஊர்வசி – மகளிர் மட்டும்
வரலட்சுமி சரத்குமார்- விக்ரம் வேதா
சிறந்த இசையமைப்பாளர்
அனிருத் ரவிச்சந்தர் – வேலைக்காரன்
அனிருத் ரவிச்சந்தர் – விவேகம்
ஏ.ஆர்.ரஹ்மான் – காற்று வெளியிடை
ஏ.ஆர்.ரஹ்மான் – மெர்சல்
இமான் – போகன்
SHARE