கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அனைத்து ஊடகங்களிலும் பேசப்பட்ட ஒருவர் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ரஹ்மா ஹருனா என்ற பெண்.
அரிய வகை நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டிருந்த அவரின் வாழ்க்கை பிளாஸ்டிக் பேசினுக்குள்ளேயே முடங்கிபோயிருந்தது. ஹருனா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிகமாக ஊடகங்களில் பேசப்பட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த நத்தார் பண்டிகை தினத்தன்று ரஹ்மா ஹருனா தனது 19வது வயதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறந்து 6 மாதங்களில் ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக இவரது உடல் உறுப்புக்கள் வளராமல் தடைப்பட்டன. தனது ஒவ்வொரு தேவைக்கும் பிறரின் உதவியை எதிர்ப்பார்த்திருந்தார்.
ரஹ்மா ஹருனாவின் 10 வயதுடைய தம்பி அவருக்கு உறுதுணையாக இருந்து, தனது கிராமத்தில் உள்ள எல்லா இடங்களுக்கும் அழைத்து சென்று வந்தார்.
தான் ஒரு மளிகைக்கடை ஆரம்பிக்க வேண்டும் என்பதே ரஹ்மா ஹருனாவின் லட்சியமான இருந்தது. தன்னை சுற்றி இத்தனை அன்பானவர்கள் இருக்கும்போது தன்னால் எதையும் சாதிக்க முடியும் எனவும் ஹருனா நெகிழ்சியாக கூறியிருந்தார்.
இந்நிலையில் கடந்த நத்தார் தினத்தன்னு அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரின் மரணத்துக்கான சரியான காரணம் தெரிவிக்கப்படவில்லை. எவ்வாறாயினும், திடீர் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.