பிளாஸ்டிக் மாசை கட்டுப்படுத்துவது தொடர்பான சர்வதேச உடன்படிக்கை ஒன்றில் இலங்கை உட்பட்ட 22 நாடுகள், கைச்சாத்திடவுள்ளன

523

பிளாஸ்டிக் மாசை கட்டுப்படுத்துவது தொடர்பான சர்வதேச உடன்படிக்கை ஒன்றில் இலங்கை உட்பட்ட 22 நாடுகள், கைச்சாத்திடவுள்ளன.

ஜூன் 5ஆம் திகதி சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, ஜூன் மாதம் 4ஆம் திகதி வியட்நாமில் வைத்து இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது.

இலங்கை, அமெரிக்கா, ஜெர்மனி, சுவீடன், நியூஸிலாந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, நோர்வே, இத்தாலி, பெல்ஜியம், ஒஸ்ரியா, பிரித்தானியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் தூதரகங்களும், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, உட்பட்ட ஐக்கிய நாடுகளின் நிறுவனங்களும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளன.

இந்த உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் வியட்நாமில் உள்ள கனேடிய தூதரகம், இது தொடர்பில் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது

அதில், வருடந்தோறும் உலகில் 300 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவற்றில் பொருட்களை கொண்டு செல்லும் உறைகள் உட்பட்ட அரைவாசி பொருட்கள் ஒரு நோக்கத்துக்காக மாத்திரம் பயன்படுத்தப்படுகின்றன

இதேவேளை 1950ஆம் ஆண்டு பிளாஸ்டிக் அறிமுகப்பட்டதன் பின்னர், உலகில் 8.3 பில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதில் 91 வீதமான பிளாஸ்டிக் பொருட்கள் மீள் உற்பத்திக்கு உட்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE