பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு பெரிய அளவிலான பங்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஆசிரியர் தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தாயினால் உருவாக்கப்படும் குழந்தையை முழுமையான மனிதனாக்குவது ஆசிரியர் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு குழந்தை ஞானியாகவும், படித்தவராகவும் சிரேஷ்ட கலைஞராகவும், சமூக தலைவராகவும் பாடசாலையிலேயே உருவாக்கப்படுகின்றார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் பீ.இராதாகிருஷ்னன் ஆகியோர் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.