பிள்ளையானின் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

256

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பிணை மனு மீதான விசாரணையை எதிர்வரும் 01ம் திகதி வரை ஒத்திவைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை சந்திரகாந்தனின் பிணை மனு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதிக்கு பிணை மனு மீதான விசாரணையை ஒத்தி வைப்பதாக மேல்நீதிமன்ற நீதிபதி திருமதி சந்திராணி விஸ்வலிங்கம் உத்தரவிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில்; நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றினால் சந்திரகாந்தன் 23ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE