தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதல்வருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. சிவனேசதுறை சந்திரகாந்தன் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம். அப்துல்லாஹ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அத்துடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்த பிரதீப் மாஸ்டர் மற்றும் கஜன் மாமா ஆகியோருக்கும் விளக்கமறியல் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் பிள்ளையான் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் நாத்தார் பண்டிகையன்று ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை அண்மையில் பிள்ளையான் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. பிள்ளையானின் விளக்க மறியல் காலம் எதிர்வரும் 30ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.