வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வீமன்காமம் பகுதியில் கடந்த வாரம் மீள் குடியேற்றத்திற்கு சென்ற மக்களிற்கு பேரதிர்ச்சி சம்பவமொன்று நிகழ்ந்திருக்கிறது.
ஏற்கனவே தமது வீடுகள் இடித்தழிக்கப்பட்ட துயரத்தில் சென்ற மக்களிற்கு, அங்கு தமது குல தெய்வமான பிள்ளையார் ஆலயத்தை காணாது பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பிள்ளையார் ஆலயம் தற்போது புத்தவிகாரையாக மாற்றப்பட்டுள்ளதுதான் மக்களை அதிக விசனம் கொள்ள வைத்துள்ளது.இந்த பிள்ளையார் ஆலயம் தற்போது விடுவிக்கப்பட்ட பகுதிக்குள் உள்ளடங்கவில்லை.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலி இந்த ஆலயத்தின் அருகாக செல்கிறது. வீமன்காமம் பகுதியின் வடக்குப் புறத்தில் புகையிரதப் பாதைக்கு அருகாமையில் உயர்பாதுகாப்பு வலய முள்வேலி எல்லையுடன் அமைந்துள்ளது.
குமாரத்தி பள்ளத்தில் அமைந்து இருந்த இந்த ஆலயம் குமார கோவில் என அழைக்கப்பட்டது. தற்போது அங்கிருந்த அரச மரத்துடன் பெரிய பௌத்த கோவில் கட்டப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.வீமன்காமம் வடக்கு தெற்கு பகுதியில் தமது காணிகளை துப்புரவு செய்யும் மக்கள் தமது காணிகளுக்கு நேர் எதிரே கண்ணிற்கு தெரியும் தூரத்தில் அமைந்துள்ள குமாரத்தி பள்ளம் பகுதியில் நடக்கும் இந்த அக்கிரமத்தை பார்த்து வயிறு எரிந்தபடி நின்றதாக கூறினார்கள்.