அனுராதபுரம் பிரதேசத்தில் பிஸ்கட், தாமரை விதைகள் மற்றும் மென்பானம் அருந்திய பாடசாலை மாணவி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 6 வயது பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதே உணவை உட்கொண்ட ஏனைய மாணவிகளும் கவலைக்கிடமான நிலையில் தற்போது அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகள் 11, 16 மற்றும் 17 வயதுடையவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் 6 வயது மாணவியின் மரணம் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை என்றும், இது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.