பீகாரில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்..!!

210

இந்தியாவில் சமீபகாலமாக போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதை தடுத்து நிறுத்த போலீசார் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளின்போது ஆங்காங்கே போதைப்பொருட்கள் சிக்குகின்றன.

இந்நிலையில், பீகார் மாநிலத்தின் போஜ்பூர் மாவட்டத்தில் சிலர் தங்கள் வீடுகளில் போதைப் பொருள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, அம்மாவட்டத்திற்குட்பட்ட குசரியா கிராமத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது நான்கு வீடுகளில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதைத்தொடர்ந்து, போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார் அந்த வீட்டில் குடியிருந்தவர்களை கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் அளவு 395 கிலோ இருக்கும் எனவும் அதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய் எனவும் கூறப்படுகிறது.

SHARE