பீப் பாடலால் இது நம்ம ஆளு படத்திற்கு வந்த சிக்கல்?

465

சிம்பு நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் படம் இது நம்ம ஆளு. இப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் திரைக்கு வரும் என கூறப்பட்டது.

மேலும், இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுவதாகவும் இருந்தது. ஆனால், சமீபத்தில் லீக் ஆன பீப் பாடலால் சிம்புவிற்கு பல பிரச்சனைகள் எழுந்துள்ளது.

இதை காரணம் காட்டி இது நம்ம ஆளு படத்தை வெளியிடும் முயற்சியில் இருந்து தேனாண்டாள் பின் வாங்கியுள்ளது. ஆனால், சொன்ன தேதியில் படம் வரும், யாரும் வெளியிடவில்லை என்றால் நாங்களே வெளியிடுவோம் என சிம்பு குடும்பத்தினர் கங்கனம் கட்டி உள்ளனர்.

SHARE