புகலிடக்கோரிக்கையாளர்களால் 35 மில்லியன் வருமானம் ஈட்டும் நாடு – விபரம் உள்ளே

217

download-3

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய பலர் நவுறு தீவிலும் அங்குள்ள தடுப்பு முகாமிலும் தங்க வைக்கப்பட்டுள்ளமை யாவரும் அறிந்த விடயமே.

இந்தச் சேவைக்காக நவுறு அரசுக்கு ஆண்டொன்றுக்கு 35.3 மில்லியன் டொலர்கள் வருமானம் கிடைப்பதாக Amnesty International அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அங்கு ஒரு அகதியைக் குடியமர்த்துவதற்கு மாதமொன்றுக்கு மூவாயிரம் டொலர்களையும் புகலிடக்கோரிக்கையாளர் ஒவ்வொருவருக்கும் மாதமொன்றுக்கு தலா ஆயிரம் டொலர்களையும் நவுறு அரசு கட்டணமாக அறவிடுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இப்படியாக அவுஸ்திரேலியாவிடமிருந்து நவுறு அரசுக்கு வருடமொன்றுக்கு ஆகக் குறைந்தது 31.5 மில்லியன் டொலர்கள் வருமானம் கிடைக்கும் வகையில் சுமார் 5 வருடங்களுக்கான ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளதாகவும் Amnesty International அறிக்கை தெரிவித்துள்ளது.

அதேநேரம் நவுறு தடுப்பு முகாமைக் கொண்டு நடத்துவதற்கு 2014 மற்றும் 2015 காலப்பகுதியில் 415 மில்லியன் டொலர்களை அதாவது ஒரு புகலிடக்கோரிக்கையாளருக்கு மூன்றரை லட்சம் டொலர்களை அவுஸ்திரேலிய அரசு செலவிட்டிருப்பதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

புகலிடக்கோரிக்கையாளர்களை மனிதாபிமானமற்ற முறையில் தடுத்து வைப்பதற்காக அரசு இவ்வளவு பணத்தைச் செலவிடுவதாக Amnesty International சாடியுள்ளது.

இதேவேளை அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய 1200 பேர் நவுறு தீவில் வாழ்ந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE