புகலிடம் கோர விமானத்தை கடத்தியது அம்பலம் 

286
சைப்ரஸ் நாட்டில் புகலிடம் கோருவதற்காக பயணிகள் விமானத்தை கடத்தியதாக எகிப்து நாட்டு பிரஜை பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மூன்றாம் இணைப்பு:

எகிப்து நாட்டிலிருந்து புறப்பட்ட EgyptAir என்ற விமானத்தை நடுவானில் மர்ம கும்பல் ஒன்று கடத்தியதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

விமானிகள் உட்பட 81 பயணிகள் இருந்த அந்த விமானம் கெய்ரோ நகருக்கு செல்லாமல், ஐரோப்பாவில் உள்ள சைப்ரஸ் நாட்டில் தரையிறங்கியது.

விமானம் தரையிறங்கியதும், விமானத்தில் தனி நபர் ஒருவர் மட்டுமே விமானத்தை கடத்தியதாகவும், 4 பயணிகளை தவிர மற்றவர்களை விமானத்திலிருந்து விடுதலை செய்ய அந்த நபர் அதிகாரிகளிடம் ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும், அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஒரு எகிப்து நாட்டு பிரஜை என்றும் சைப்ரஸ் நாட்டில் புகலிடம் கோருவதற்காக விமானத்தை கடத்தியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டாம் இணைப்பு:

சைப்ரஸ் நாட்டில் விமானம் தரையிறங்கியதும், விமானத்தில் உள்ள ஆயுதம் ஏந்திய நபர்களிடம் எகிப்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், விமானத்தில் உள்ள4 வெளிநாட்டு பயணிகள் மற்றும் விமானக்குழுவைச் சேர்ந்தவர்களைத் தவிர மற்ற அனைவரையும் விடுதலை செய்ய மர்ம கும்பல் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

மேலும், விமானத்தை கடத்தியது தனி நபர் என்றும், அவர் எகிப்து நாட்டு குடிமகன் என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும், அவரது கோரிக்கை என்ன? என்பது உள்ளிட்ட எந்த தகவலும் வெளியாகவில்லை.

முதல் இணைப்பு:

எகிப்து நாட்டிற்கு சொந்தமான பயணிகள் விமானத்தை நடுவானில் மர்ம கும்பல் கடத்தியுள்ளதாகவும், அந்த விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் பிணையக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

எகிப்து நாட்டை சேர்ந்த EgyptAir என்ற பயணிகள் விமானம் இன்று காலை அதே நாட்டில் உள்ள Alexandria என்ற நகரிலிருந்து எகிப்தின் தலைநகரான கெய்ரோவிற்கு புறப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் விமான குழுவினர் உள்பட 81 பேர் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், சற்று முன்னர் வெளியாகியுள்ள தகவலில் பயணிகள் விமானத்தை மர்ம கும்பல் ஒன்று கடத்தியுள்ளதாகவும், தற்போது ஐரோப்பாவில் உள்ள சைப்ரஸ் நாட்டில் தரையிறங்கியுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சைப்ரஸில் உள்ள Larnaca என்ற விமான நிலையத்தில் அந்த விமானம் உள்ளூர் நேரப்படி 8.46 மணியளவில் தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானம் தரையிறங்கியதும் அதில் ஒரு நபர் ஆயுதம் ஏந்தி உள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளை தற்போது வெளியேற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவலை எகிப்து நாட்டு வான்வெளி போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

மேலும், விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதுடன், விமானத்தை கடத்தியவர்களும் வெடிகுண்டுகள் கட்டிய உடுப்புகளை அணிந்தவாறு விமானிகளை மிரட்டியுள்ளதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

SHARE