புகைப்படத்திற்காக மென்மையான மலர்களை வதைக்கும் சீன மக்கள்

314
சீனாவில் வசந்தகாலம் ஆரம்பித்துவிட்டால் அங்குள்ள செர்ரி மரங்களுக்கு துன்பக்காலம் ஆரம்பித்துவிடும்.ஏனெனில், புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதற்காக மக்கள் அந்த மரங்களை வாட்டி வதைப்பார்கள்.

சீனாவின் Nanjing நகரில் அமைந்துள்ள செர்ரி மரத்தில் பெண்மணி ஒருவர் செல்பி புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக, அந்த மரத்தின் மீது உயரமான காலணியை அணிந்துகொண்டு ஏறுகிறார்.

இதில் அந்த கிளைகள் உடைந்துவிடுகிறது, இருப்பினும் விடாப்பிடியாக மரத்தின் மீது ஏறி புகைப்படம் எடுத்துக்கொள்கிறார், மற்றொரு நபர் மரத்தினை எட்டி உதைக்கிறார், இதனால் அந்த மரத்தின் இழைகள் உதிர்கையில் அதற்கு கீழே நின்றுகொண்டு கைகளை விரித்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறார்.

இந்த இரண்டு புகைப்படங்களும் சீனாவில் வைரசாக பரவி வருகிறது, இதனை பார்த்த மக்கள் கோபமடைந்து அவர்கள் இருவரையும் தண்டிக்க வேண்டும் என்றும் இது நம் நாட்டின் பண்பாடற்ற பழக்கம் என்று கூறியுள்ளனர். மேலும், இவர்களது இந்த பழக்கவழக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறியுள்ளனர்.

SHARE