புகைப்பழக்கத்திலிருந்து விடுபட உதவும் புரதம்: ஆய்வில் தகவல்

587
சரியான அளவில் புரத உணவுகளை உள்ளெடுப்பதனால் ஆரோக்கியமாக வாழ முடியும் என இதுவரை காலமும் பல ஆய்வு முடிவுகள் மூலம் எடுத்துக்காட்டப்பட்டன.ஆனால் புதிய ஆய்வு ஒன்றில் அதிகமாக புரதச் சத்தினைக் கொண்ட உணவுகளை  உட்கொள்வதன் மூலம் புகைப்பழக்கத்திலிருந்து வெளியேற முடிவதுடன், உடலுக்கு அவசியமான அமினோ அசிட்டும் அதிகளவில் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.ஐக்கிய இராச்சியத்திலுள்ள East Anglia பல்கலைக் கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்த முடிவு கிடைக்கப்பெற்றுள்ளது.அமினோ அமில அதிகரிப்பானது இருதய ஆரோக்கியத்தை மேம்படச் செய்வதாகவும், புகைப்பிடித்தல் பழக்கத்திலிருந்து விடுபடல் போன்ற செயன்முறைகளால் வாழ்க்கை  முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் அதிக புரதச் சத்தினை உள்ளெடுப்பதனால் Lower Blood Pressure ஏற்படும் வாய்ப்புக்கள் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE