கனேவத்தையில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த புகையிரதத்துடன் கார் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொல்கஹாவெல – அலவ்வவிற்கும் இடையே உள்ள புகையிரத கடவை சந்தியில் இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த புகையிரதக் கடவையில் சமிக்ஞை விளக்குகள் சரியாக செயற்பட்டும் அதை மீறி கடவையை கடக்க முற்பட்டமையே இந்த விபத்துக்கு காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் பொத்துஹெர பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய நபர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில நாட்களாக வீதி விதிமுறைகளை பின்பற்ற தவறுவதால் பல விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.