“புங்குடுதீவு மகா வித்தியாலயத்தின் உயர்தர வகுப்பு மாணவியின் படுகொலை தொடர்பில் நியாயமான விசாரணைகளை பொலிஸார் உடன் விசாரிக்க வேண்டும்- மாவை.சேனாதிராஜா

372

SAMSUNG CAMERA PICTURES

“புங்குடுதீவு மகா வித்தியாலயத்தின் உயர்தர வகுப்பு மாணவியின் படுகொலை தொடர்பில் நியாயமான விசாரணைகளை பொலிஸார் உடன் விசாரிக்க வேண்டும்.” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா எம்.பி. பொலிஸ் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டவை வருமாறு:

புங்குடுதீவு 9 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவியான சிவலோகநாதன் வித்தியா நேற்று முன்தினம் புதன்கிழமை பாடசாலைக்கு சென்றபின் வீடு திரும்பவில்லை. அவரைத் தேடி அவரின் பெற்றோர் அலைந்து திரிந்த போதும் மாணவி கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை காலை புங்குடுதீவு 4 ஆம் வட்டாரம் கண்ணகி அம்மன் கோயில் பகுதியில் பாழடைந்த வீட்டில் கோரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் மாணவி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

அத்துடன் மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார் என்பது மற்றொரு அதிர்ச்சியான செய்தி. மாணவியின் இந்தக் கோர கொலை தொடர்பில் பொலிஸ் துறைக்குப் பொறுப்பான ஜோன் அமரதுங்கவைத் தொடர்பு கொண்டு வல்லுறவு கொலையாளிகளை கண்டுபிடித்துக் கடுமையாக தண்டிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளேன். மேலும் இத்தகைய சம்பவங்கள் இனியும் தொடராமல் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளேன்

SHARE