“புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பல கோணங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.

351

 

“புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பல கோணங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள 9 போரையும் தவிர விசாரணைகள் முடிவடையும் வரை இதனுடன் மேலதிகமாக தொடர்புடையவர்கள் குறித்து எதனையும் குறிப்பிட முடியாது.” – இவ்வாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Ruwan-720x480-720x480-720x480

அவர் மேலும் தெரிவிக்கையில், “வித்தியா படுகொலையைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து அங்கு பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமை தொடர்பில் 130 பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் தொடர்பிலான விசாரணைகள் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்படுவதோடு இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் பொலிஸாரின் ஏதேனும் தவறுகள் இடம்பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்படுமானால் கடமையில் இருந்த பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்”

SHARE