
டிஷ்யு பனாரஸ் புடவைகளை மடித்து வைத்தால் கிழிந்து போகும். எனவே நூல் கண்டு போல் சுற்றி வைக்க வேண்டும்.ஜர்தோசி, சம்கி வேலைப்பாடு புடவைகளை மல்லு துணி கொண்டு சுற்றி வைக்க வேண்டும். நாப்தலீன் பந்துகளை பயன்படுத்த வேண்டாம்.
உடையின் மேல் வாசனை திரவியம் தெளிக்கக் கூடாது. அது, கரையாகும். காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளை(saree) ஒன்று இரண்டாக மடிக்க வேண்டும். அதே போல் நிறைய புடவைகளை ஒரே பெட்டியில் அழுத்தி அடுக்கி வைக்கக் கூடாது.
ஷிபான் புடவைகளை ஹாங்கரில் தான் மாட்ட வேண்டும். நூல் மற்றும் சம்கி வேலைப்பாடு புடவைகளை(saree) சோப்புத் தண்ணீரில் நனைத்து அலசிகாய வைக்கலாம்.
சில சமயம் ஜாக்கெட்டில் அக்குள் பகுதியில் வியர்வை கரை படியும். இதை போக்க வெள்ளை பெட்ரோலிய ஜெல்லியை பஞ்சில் நனைத்து குறிப்பிட்ட பகுதியில் துடைத்தால் கரை மறையும். புடவையின் நிறம் மங்கினால் மறுபடியும் டை செய்துக் கொள்ளலாம். பட்டுப்புடவைகளை டிரைகிளீன் மட்டுமே செய்ய வேண்டும்.இப்போது புடவைகளுக்கான கவர் கிடைக்கிறது. அதில் புடவைகளை மடித்து வைக்கலாம்.