புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள தேசிய வரி நடைமுறை தொடர்பில் தெளிவுப்படுத்தல்

168

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள தேசிய வரி நடைமுறை தொடர்பில் தெளிவுப்படுத்தல் மற்றும் சிறந்த வரியிறுப்பாளர்களை கௌரவித்தல் என்பன நேற்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இறைவரி திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பிலுள்ள விடுதியொன்றில் நடைபெற்றள்ளது.

இதன்போது, அரசாங்கம் அறிமுகம் செய்துள்ள புதிய வரி கொள்கை தொடர்பில் நேற்று காலை முதல் மாலை வரை வரியிறுப்பாளர்களுக்கு தெளிவுபடுத்தல்கள் நடைபெற்றுள்ளன.

அத்துடன் 20 வரியிறுப்பாளர்களுக்கு தங்க அட்டைகளும், 31 வரியிறுப்பாளர்களுக்கு வெள்ளி அட்டைகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் இருந்து 500 இற்கும் மேற்பட்ட வரியிறுப்பாளர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், இறைவரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் முனசிங்க, சிரேஸ்ட ஆணையாளர்களான கப்புஹாராச்சி உட்பட பலரும் இணைந்திருந்தனர்.

 

SHARE