இலங்கைக்கு புதியவெளிவிவகார சேவையை அறிமுகப்படுத்தப்போவதாக தெரிவித்துள்ள பிரதமர் ரணில்விக்கிரமசிங்க இலங்கையில்; வெளிவிவகார அமைச்சு என்ற ஓன்று இல்லை என்ற எண்ணத்துடனேயே தான் பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஜப்பானிற்கான இலங்கை தூதரகத்தை சேர்ந்த அதிகாரிகளின் அசமந்தபோக்கு குறித்து மூத்த அதிகாரிகள் சிலரும்,ஊடகவியலாளர்களும் பிரதமரிடம் சுட்டிக்காட்டிய வேளையே அவர் இதனை தெரிவித்துள்ளனர். இலங்கைக்கான வெளிநாட்டு தூதரகங்கள் முற்றுமுழுதாக குழப்பத்தில் சிக்கியுள்ளன போல தோன்றுகின்றது, கொழும்பிற்கு சென்றவுடன் இதற்கு தீர்வு காண்பேன் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். நாட்டில் வெளிவிவகார அமைச்சு என்ற எதுவும் இல்லை என்ற அடிப்படையிலேயே நான் பிரதமராக பணியாற்றுகின்றேன்,நான் எனது வெளிநாட்டு பயணங்களில் அவர்களை ஈடுபடுத்துவது இல்லை, இலங்கை திரும்பியதும் நான் புதிய வெளிவிவகார சேவையை ஏற்படுத்துவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.