புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பான யோசனை, எதிர்வரும் 9 ஆம் திகதி

331

 

புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பான யோசனை, எதிர்வரும் 9 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

maith16.jpg2_6.jpg4_6

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதியேற்று எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியாகவுள்ள நிலையிலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து நாடாளுமன்றத்திடம் அதிகாரத்தைக் கொடுத்தல், புதிய தேர்தல் முறைமையை அறிமுகம் செய்தல், இனப் பிரச்சினைக்குத் தீர்வு உட்பட பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய அரசமைப்பைக் கொண்டுவர அரசால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் அரசின் உயர்மட்டத்தில் பேச்சுகள் இடம்பெற்று வருவதுடன், சிவில் அமைப்புகளின் யோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்காக அரசியல் கட்சிளின் பிரதிநிதிகள் அடங்கிய 21 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. இக்குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் 7 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் 7 உறுப்பினர்களும், 7 சிறிய கட்சிகளின் உறுப்பினர்களும் உள்ளடக்கப்படவுள்ளனர். புதிய தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்துவது தொடர்பில் யோசனைகளைப் பெற்றுக்கொள்ள ஜனாதிபதி சட்டத்தரணியும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்கிரமரத்ன மற்றும் கலாநிதி சுதந்த லியனகே, பிரதி அமைச்சர் கருணரத்ன பரணவித்தான, கலாநிதி பாக்கிய சோதி சரவணமுத்து உட்பட பல்வேறு சிவில் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE