கருத்துக்களை அறிந்துகொள்ள நேரத்தை ஒதுக்கித் தருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை இதுவரையில் கவனத்திற் எடுத்துக்கொள்ளப்படவில்லை என புதிய அரசியல் அமைப்பு குறித்து மக்களின் கருத்தறியும் குழு தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சியின் முக்கிய பங்களிப்பினை வழங்குவதாக கூறும் இளைஞர்களுக்கு முக்கியத்தும் அளிப்பதாக கூறும் ஜே.வி.பி.யின் கருத்தை அறிந்துகொள்ள விரும்புதாக குறித்த குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றின் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில் புதிய அரசியல் சாசனம் குறித்த மக்கள் கருத்துக்களை அறிந்து கொள்ளும் நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளன. தற்போது அறிக்கை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதிய அரசியலமைப்பு குறித்து கருத்து வெளியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும், ஜே.வி.பியும் நேரத்தை ஒதுக்கினால் கருத்துக்களைப் பெற்றுக் கொள்ளத் தயார் என லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேசிய நல்லிணக்கம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமயிலான அலுவலகத்தின் ஊடாக முக்கிய தகவல்களை பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.