நாட்டில் தற்போது புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு ஆனது சுவிஸர்லாந்தில் உள்ள அரசியல்யாப்பை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று சுவிஸர்லாந்தின் சபாநாயகருடனான சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது சுவிஸில் அமுல்படுத்தியுள்ள அரசியல்யாப்பானது அனைத்து சமூகத்தினருக்கும் சம உரிமையை வழங்கும் விதத்தில் அமைந்துள்ளது. இதன் காரணமாகத்தான் அந்த நாடு உலகளாவிய ரீதியில் முன்னோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இதனடிப்படையில்தான் இலங்கையின் புதிய அரசியல்யாப்பு தயாரிக்கப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.