புதிய அரசியலமைப்பு தொடர்பாக அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கான ஆவணமொன்றை தயாரிக்கும் பொறுப்பை நிபுணர் குழு ஒன்றுக்கு அரசியலமைப்பு வழிநடத்தல் குழு வழங்கியுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழு நேற்று முன்தினம் கூடியது.
இதன்போது அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மற்றும் இடைக்கால அறிக்கை மீது நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பான அறிக்கை, ஆறு உப குழுக்களின் அறிக்கைகள் என்பனவற்றை சேர்த்து பேச்சுவார்த்தைக்கான ஆவணமாக ஒரு அறிக்கையாக தயாரிக்கும் பொறுப்பு நிபுணர் குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.