புதிய அரசியலமைப்பு! மக்களின் கருத்துக்கள் அடங்கிய அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது

186

 

புதிய அரசியல் அமைப்பு பற்றிய மக்களின் கருத்துக்கள் அடங்கிய அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

சட்டத்தரணி லால் விஜேநாயக்க தலைமயிலான குழுவொன்றினால் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அரசியல் அமைப்பு பற்றிய மக்கள் கருத்துக்கள் அறியப்பட்டிருந்தன.

அரசியல் அமைப்பு பற்றி மக்கள் வெளியிட்ட கருத்துக்கள் மற்றும் கருத்து கோரும் பணிகளின் முன்னேற்றம் பற்றி எதிர்வரும் 15ம் திகதி ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சட்டத்தரணி விஜேநாயக்க கொழும்பு பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தெளிவுபடுத்தப்பட உள்ளது.

மேலும் இந்த மாதத்திற்குள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க ஆகியோரிடம் தமது குழு கருத்துக்களை கோர உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கங்கள், தொழில்சார் நிபுணர்கள், தொழில்வான்மையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆணைக்குழு ஆகியனவற்றினதும் கருத்துக்கள் கோரப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இன்று முதல் 5ம் திகதி வரையில் மீளவும் கொழும்பு மாவட்ட மக்களிடம் புதிய அரசியலமைப்பு பற்றி மக்களின் கருத்துக்கள் கோரப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் அரசியல் அமைப்பு தொடர்பில் எழுத்து மூலமாகவும் வாய் மொழி மூலமாகவும் 5000 கருத்துக்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

SHARE