இலங்கையில் தற்போதைய அரசியல் நீரோட்டத்தில் கூட்டு வேலைத்திட்டம் தயாரிப்பது கூட்டு எதிர்க்கட்சி தலைவர்களின் முயற்சி என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
புதிய கட்சி அமைப்பது தொடர்பில் வெளியாகும் செய்திகள் குறித்து ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பிரதான அமைப்பாளர் பசில் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு வேலைத்திட்டத்தின் கருத்து நிச்சியமாக வேறு கட்சி அமைப்பதா என பசில் ராஜபக்சவிடம் வினவிய போது,
அரசியல் கட்சியை விட அந்த அமைப்புகள் அனைத்தும் ஒரே நோக்கத்தில் பயணிப்பது தெரிகின்றமையினால், அவை ஒரே இடத்திற்கு பயணிப்பதற்கு செயற்பட வேண்டும் என கலந்துரையாடப்பட்டதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்படியென்றால் புதிய கட்சிக்கு பதிலாக தற்போதைய வேலைத்திட்டம் தொடர்பில் குறிப்பிடுகின்றீர்கள் என்றால் புதிய கட்சியை உருவாக்குவதற்கான வாய்ப்பு இல்லை என்பதனாலா? என பசிலிடம் வினவிய போது,
புதிய கட்சி ஒன்று உருவாகுவதற்கு முன்னர் நிறைவேற்றப்பட வேண்டிய பல விடயங்கள் உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
புதிய கட்சி தலைவர் நீங்களா என வினவிய போது, இல்லை.. இல்லை.. உறுதியாக நான். இல்லை.. நான் மிகவும் சிறிய அளவிலான விடயங்களை மாத்திரமே மேற்கொள்கின்றேன் என பசில் கூறியுள்ளார்.