
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கையில் மோதுகிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஹம்பன்டோட்டோவில் 22 ஆம் திகதி நடந்தது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 47.1 ஓவர்களில் 201 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.
ஒரு நாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை, ஆப்கானிஸ்தான் ஆல் – அவுட் ஆக்கியது இதுவே முதல் முறையாகும்.
இதனையடுத்து 202 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி 59 ஓட்டங்களில் ஆல் – அவுட் ஆனது.
இதன் மூலம் 142 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றியை பெற்றது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாம் டக் அவுட் ஆனதன் மூலம் மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார்.
ஒருநாள் போட்டியில் 4 ஆவது முறையாகவும் அணித்தலைவராகவும் 2 ஆவது முறையாகவும் டக் அவுட் ஆகியுள்ளார்.
இதன் மூலம் இம்ரான் கான், ஜாவேத் மியான்தத், அசார் அலி மற்றும் யூனிஸ் கான் ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் பாகிஸ்தான் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2 ஆவது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் இன்று (24) நடக்கிறது.