புதிய திரவ எரிபொருள்

295

தற்போது பாவனையில் உள்ள திரவ எரிபொருட்கள் மீளமுடியாத எரிபொருட்களாகவே காணப்படுகின்றன.

அதாவது குறிப்பிட்ட சில வருடங்களின் பின்னர் இவ்வாறான எரிபொருட்களுக்கு மிகுந்த தட்டுப்பாடு நிலவும்.

எனினும் இப் பிரச்சினைக்கு தீர்வு தரும் முகமாக புதிய திரவ எரிபொருள் ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Solar Thermal Fuel எனப்படும் இவ் எரிபொருள் ஆனது சூரிய சக்தியை சேமித்து வைத்து மீளவும் பயன்படுத்தக்கூடியது.

அதாவது ஒரு ரீசார்ஜ் செய்யக்கூடிய மின்கலத்தைப் போன்று செயற்படக்கூடியது.

இவ்வாறு 18 வருடங்களுக்கு குறித்த எரிபொருளை பயன்படுத்த முடியும் என்பது சிறப்பம்சமாகும்.

இதனை சுவீடனைச் சேர்ந்த விஞ்ஞானிகளே கண்டுபிடித்துள்ளனர்.

SHARE