புதிய தொழில்நுட்பத்தில் இலங்கை நாடாளுமன்றம்!

222

நாடாளுமன்றத்தில் முதன் முறையாக இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரத்தைப் பயன்படுத்தி வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நாணயப் பரிமாற்ற சட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் திருத்தங்களுக்குப் பின்னர் நிறைவேற்றப்பட்ட நிலையில், இதற்கான வாக்குப் பதிவுகள் இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரத்தைப் கொண்டு நடத்தப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் கொண்டு வரப்பட்ட இந்த சட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 96 வாக்குகளும், எதிராக 18 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, திருத்தங்களுடன், 78 மேலதிக வாக்குகளால் வெளிநாட்டு நாணயப் பரிமாற்ற சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முதன் முறையாக இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரங்களைப் பயன்படுத்தி தமது வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE