
07.07.2018 இன்று பாராளுமன்ற அமர்வின் போது தேர்தல்கள் திருத்தச்சட்டமூலம் ஒத்திவைப்பு விவாதம் நடைபெற்றது. இதில் மாகாண சபை தேர்தல் தொகுதிகளின் எல்லை நிர்ணய அறிக்கை யூலை 2 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இதனை நிராகரித்த எம்.பி சி.சிவமோகன் கருத்து தெரிவிக்கையில் ‘ இதனை அரசியல் அறிவியல் ரீதியான எழுத்துமூலம் என்று மட்டும் குறிப்பிட முடியும். ஆனால் நடைமுறையில் வேறு ஒன்றாகத்தான் இது இருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை. ஏனனில் இதில் ஒரு விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின் றது.
50 வீதம் முன் மொழியப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை இன ரீதியான அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. இது நடைமுறைக்கு சாத்தியப்படாத ஒன்று என எங்கள் அனைவருக்கும் தெரிந்த விடையம் ஏன் என்றால் இன ரீதியில் சிங்களவர், சிங்களவருக்கும், தமிழர்கள், தமிழர்களுக்கும், முஸ்லிம்கள், முஸ்லிமிற்கும் வாக்களித்தால் மட்டுமே இந்த அட்டவனை பொருந்தும்.
அப்படியாக எவர் ஒருவரையும் வாக்களிப்பில் பலாத்காரப்படுத்த முடியாது என்பதினை இந்த நிபுணர் குழு அறியவில்லை போல் எனவே ஒட்டுமொத்தமாக நிபுணர் குழு அறிக்கையினை நான் இச் சபையில் நிராகரிக்கின்றேன்.
மேலும் கருத்து தெரிவிக்கையில் கடந்த மாகாண சபை தேர்தலுக்காக 50 இற்கு 50 என தீர்மானிக்கப்பட்டிருந்தது. பிரதேச சபைத்தேர்தல் எங்களுக்கு பல பாடங்களினை கற்ப்பித்திருக்கின்றது. அதாவது கடந்த பிரதேச சபை தேர்தலில் நாம் கற்றுக்கொண்ட பாடம் என்ன என்ற கேள்வி இங்கே எழும்புகின்றது.
60 இற்கு 40 என்ற அடிப்படையில் இந்த தெரிவுகள் இடம்பெற்றிருந்தன இதற்கு ஒர் உதாரணம் கூறலாம் முல்லை மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் 12 வட்டாரங்களில் 11 வட்டாரத்தினை வென்ற எமது கட்சி இறுதியாக 11 இற்கு 11 ஆக ஆட்சியில் பெரிய சிக்கல் நிலையை சந்தித்தது எனவே இது ஒரு ஜனநாயக விரோதமான ஒரு செயற்பாட்டிற்கு முன்னர் நாம் ஏற்றுகொண்டு விட்டோம் என்பது மிகவும் கவலைக்குரிய விடையமாக இருந்தது.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் இந்த ஸ்திரள்தன்மை அற்ற ஆட்சிக்கு உரிய தேர்தல் முறைகளினை ஏன் மிண்டும் மிண்டும் இந்த சபைகளில் கொண்டு வருகின்றிர்கள் என்பது எமக்கு விளங்கவில்லை!! நிற்சயமாக கௌரவ மாண்பு மிகு ஐனாதிபதி அவர்கள் இவ் விடையத்தில் நேரடியாக தலையிட்டு பழைய தேர்தல் முறையினை எவ்வித பிரச்சினைகளும் இன்றி நடத்தப்பட்ட முறையை நாடவேண்டிய தேவைக்கு வந்திருக்கின்றோம். இந்த பிரதேச சபை தேர்தலில் 10 வாக்குகளினைப் பெற்றுகொண்ட ஒருவர் கூட முல்லைத்தீவு மாவட்டத்தில் வோனஸ் ஆசணத்தில் பெற்றுகொண்டர்.
இது ஒரு வரலாறு ஆனால் அதே பிரதேச சபையில் 1400 வாக்குகளினை பெற்றுகொண்ட ஒருவர் தனக்கு ஆசனம் அற்று வெளியே சென்றிருக்கின்றார். எனவே இதில் இருந்து உங்களுக்கு தெரியும் இது ஜனநாயகரீதியில் எவ்வளவு பிழையான விடையத்தினை இங்கு கொண்டுவந்துள்ளது என்று.
இன்னும் ஓர் விடையத்தினை கூறலாம் கடந்த உள்ளுராட்சி தேர்தலில் வவுனியா நகரசபையில் 3 வோனஸ் ஆசனங்களை பெற்றுக்கொண்ட கட்சி தவிசாளரினை பெற்றுக்கொண்டது. ஆனால் அதே நேரம் நேரடியாக 7 வட்டாரங்களினை வென்று இன்னும் ஒரு வோனஸ் ஆசனத்தினை பெற்றுக்கொண்ட கட்சி அந்த ஆட்சியினை இழந்தது.
இங்கு பேரம் பேசுதல்,கழுத்தறுப்புக்கள், கடத்தல் நாடகங்கள் இருந்தது. இவை அனைத்தினையும் நாங்கள் தெரிவு செய்த பிரதேச சபை உறுப்பினர்களின் தலையில் போட்டுவிட்டு தப்பித்து விட முடியாது.
ஏனனில் இந்த பாராளுமன்றத்துக்கான பெறுப்பு இங்கு உள்ளது. இந்த தேர்தல் முறையினை கொண்டு வந்த இந்த பாராளுமன்றம் இந்த தவறுகளினை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து.’ என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.