புதிய மைல்கல்லை எட்டியது Facebook Messenger

353
பிரபல சமூகவலைதளமான பேஸ்புக்கினை மொபைல் சாதனங்களில் பயன்படுத்துவதற்காகவும், குறுஞ்செய்திகள் அனுப்புதல், சட்டிங் என்பவற்றை இலகுவாக மேற்கொள்வதற்காகவும் அறிமுகம் செய்யப்பட்ட மென்பொருளே பேஸ்புக் மெசஞ்சர்(Facebook Messenger) ஆகும்.இந்த அப்பிளிக்கேஷனை மாதாந்தம் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை 800 மில்லியனை தொட்டதன் மூலம் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டு நொவெம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 500 மில்லியனாக காணப்பட்டதுடன், பின்னர் 2015ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் 600 மில்லியன் ஆகவும்,  யூன் மாதத்தில் 700 மில்லியனாகவும் காணப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த அப்பிளிக்கேஷன் ஊடாக மாதந்தோறும் 10 பில்லியனிற்கும் அதிகமான புகைப்படங்கள் பரிமாற்றப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE