புதிய வெளிநாட்டு தூதுவர்கள் நால்வர் நியமனம்

295

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)

இலங்கைக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய வெளிநாட்டு தூதுவர்கள் நான்கு பேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து தமது நியமன கடிதங்களை கையளித்துள்ளனர்.

மெக்ஸிக்கோ, போர்த்துக்கல், கிரீஸ் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்கள் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தல் போன்றே அனைத்து இன மக்களிடையேயும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தற்போதைய அரசின் கொள்கை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது இலங்கைக்கு வழங்கக் கூடிய அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக புதிய தூதுவர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.

SHARE