புதுக்குடியிருப்பில் அதிகரித்துள்ள யானைகளின் தாக்கம்

74

 

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மந்துவில், மல்லிகைத்தீவு போன்ற கிராமங்களில் கடந்த இரண்டு, மூன்று தினங்களாக தொடர்ச்சியாக காணிகளுக்குள் கூட்டமாக புகுந்த யானை பயிர்களை மிதித்து நாசமாக்கியுள்ளதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய இந்த மக்கள் தமது வாழ்வாதாரமாக விவசாயம் மற்றும் தோட்டச்செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களின் கோரிக்கை
இந்நிலையில், இந்த கிராமத்தில் யானையின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதனால், அப்பகுதி மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கப்படுகிறது.

SHARE