புதுக்குடியிருப்பு உதைபந்தாட்ட இறுதிச்சமர்…………..

312
03.09.2015 வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் உதைபந்தாட்ட இறுதிச்சமர் புதுக்குடியிருப்பில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளமன்ற உறுப்பினர் கௌரவ வைத்திய கலாநிதி சி.சிவமோகன் பங்குபற்றி சிறப்பித்தார். போட்டியானது புதுக்குடியிருப்பு விக்ணேஸ்வார விளையாட்டுகழகத்தின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்றது. இவ்விளையாட்டானது அமரர்.வே.நவரத்தினம். அமரர்.அழகரத்தினம் குணாளினி. அமரர்.இளையதம்பி தர்மலிங்கம். ஆகியோர்களின் ஞாபகார்த்தமாக இடம்பெற்றது.  மேற்படி இறுதிச்சமரில் இரணைப்பாலை சென்ற்அந்தோனி விளையாட்டு கழகமும் சிலாவத்தை இழம்பறவை விளையாட்டு கழகமும் பங்குபற்றின. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் இறுதியில் இரணைப்பாலை சென்ற்அந்தோனி விளையாட்டு கழகம் 4 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது…..
unnamed (3)  unnamedunnamed (4)
SHARE