புதுக்குடியிருப்பு தேவிபுரம் கிராமத்தில் 24.07.2015 அன்று மக்கள் சந்திப்பில் சிவசக்தி ஆனந்தன். வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் து.ரவிகரன், இ.இந்திரராசா, முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரியும், திரு.இ.இந்திரராசாவின் செயலாளருமாகிய திரு.பாலசிங்கம், வவுனியா ஈச்சங்குளம் முதியோர் சங்கத்தலைவர் திரு.ஜெகநாதன், லண்டனிலிருந்து வருகை தந்துள்ள சமுக சேவகர் திரு.சுந்தர், தேவிபுரம் முதியோர் சங்கத்தினுடைய முக்கியஸ்தர் சந்திரிக்கா அன்ரி, சிவில் அமைப்பின் பிரதிநிதி திரு.அன்ரூ, இவர்களுடன் கிராம மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.
தேவிபுரம் முதியோர் சங்க கட்டடம் அமைப்பதற்காக ரி.ஆர்.ரி வானொலியின் சமுகப்பணி ஊடாக 4,35,000 ரூபா நிதியுதவியும், தேங்காய் எண்ணெய் வடிக்கும் ஆலை அமைப்பதற்கு 2,50,000 ரூபா நிதியுதவியும், மற்றும் இதர உதவிகளை புரிந்தமைக்கும், கிராம மக்கள் சிவசக்தி ஆனந்தனுக்கும், புலம்பெயர் உறவுகளுக்கும் நன்றிகளை தெரிவித்தனர்.