புதூர் பகுதியில் தொடருந்தில் மோதி ஒருவர் பலி

86

 

புளியங்குளம், புதூர் பகுதியில் தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட பெண் மீது தொடருந்து மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவமானது நேற்று (29.02.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது உயிரிழந்த த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசாரணை
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற தொடருந்தானது புதூர் பகுதியில் உள்ள தொடருந்து கடவையைக் கடக்க முற்பட்ட பெண் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்துள்ளார்.

இதனையடுத்து, மரணமடைந்த பெண்ணின் சடலம் மாங்குளம் தொடருந்து நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு ஒப்படைக்கப்பட்டதுடன், அங்கிருந்து மாங்குளம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

[

SHARE