திருகோணமலை, சாந்திபுரம் காட்டுப் பகுதிக்குள் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் கீழ் 07 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சாந்திபுரம் பொலிஸாரின் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து புதையல் தோண்டும் நடவடிக்கைக்கு பயன்படுத்திய பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் கைதுசெய்யப்பட்டவர்கள் பாணந்துரை, களுத்துறை, தெஹியோவிட்ட, தொடகொட மற்றும் சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்.