புத்தரின் போதனைகளையும் பௌத்த நெறிகளையும் பின்பற்ற தவறும் புத்த பிக்குகளை சிறையில் அடைக்க சட்டம் கொண்டுவர வேண்டும் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் காட்டம்

257


புத்தரின் பஞ்சசீலம் எனும் ஐந்து ஒழுக்க நெறிகளாவன பொய் செல்லாமை, களவு இல்லாமை, மற்றவரை துன்புறுத்தாமை, முறையற்ற காமத்தை நாடாமை, மனதினை அசுத்தமாக்கும் விடையங்களில் ஈடுபடாமை என்பனவாகும். ஐPவகாருண்யம் எனப்படும். இரக்கம் முதன்மையா போதிக்கப்படுகின்றது. எம்மை சூழ உள்ளவர்கள் மீதும், நம்மை சந்திப்பவர்கள்மீதும் இன மத பேதமின்றி இரக்கமுடனும், அன்புடனும் நடந்து கொள்வது பற்றி அது வெளிப்பத்துகின்றது. எல்லா மதங்களும் மக்களுக்கு நல்லனவற்றையே போதிக்கின்றது. அதனை உண்மையான ஈடுபாட்டுடன் பின்பற்றப்பட்டால் நாட்டில்; வறுமைகளும், கொலைகளும், கலவரங்களும் போர்களும் ஏற்படமாட்டாது.

ஆனால் நமது நாட்டில் புத்த பிக்குகள் தான் ஏனைய மதத்தவர்கள் மீது வெறுப்பைக் கக்குகிறார்கள். கடந்த காலங்களில் தம்மை புத்த பிக்குகள் என அடையாளம் காட்ட முற்பட்ட பிக்குகள் முஸ்லீம் சமுதாயத்தின் மீது தர்கா நகரில் தமது காட்டு தர்பாரை நடத்தி முடித்தனர். அங்கு புத்தரின் ஜீவகாருண்யம் எனப்படும் கருத்து சுக்குநூறாக்கப்பட்டது. பொல்லுத்தடிகளும் துப்பாக்கிகளும் அவர்களுக்கு எதற்கு? அகிம்சையை போதிக்கவா? அல்லது அடாவடித்தனம் செய்வதற்கா? இலங்கை சட்டம் தங்கள் சட்டைப்பைகளுக்குள் என்று செயல்பட்ட கௌதம புத்தரின் காவிதரித்த வேட தாரிகளால் பௌத்த தர்மம் எமது நாட்டில் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது.

சைவத்தை போதிக்கும் இந்து மத குருக்கள் என்றும் றோட்டிலே இறங்கியதில்லை. கிறிஸ்தவம் போதிக்கும் பாதிரிகள் தியானத்துடன் மெழுகுதிரி ஏந்தி வெள்ளை நிற சீருடையுடன் அமைதியாக மற்றவர்களுக்கு இடையூறு செய்யாது ஒரு வரிசையில் தமது கருத்துக்களை அமைதியாக சொன்னார்கள். ஆனால் பௌத்தத்தை போதிக்க வந்தவர்களில் சிலர் இன்று றோட்டில் காவியுடை கிழிய கிழிய காட்டு தர்பார் செய்கிறார்களே! இவர்களை ஒழுங்கு நெறிப்படுத்த சட்டம் கொண்டு வராதவரை பௌத்தமும் சீரளிந்து இந்நாட்டின் இனநல்லினக்கமும், இலங்கை மக்களின் வாழ்க்கையும் சீரளிந்து போகும் நிலை காணப்படுகின்றது. என வைத்திய கலாநிதி சி.சிவமோகன் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
SHARE