புத்தளம் நீதவான் நீதிமன்றத்தை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கற்பிட்டி – கந்தகுழி பிரதேசத்தில் அண்மையில் இரண்டு மீனவ குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பான வழக்கில், அதில் ஒரு தரப்பினர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் வந்திருந்ததன் காரணமாக அங்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதற்றமான நிலைமை ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் இந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.