புத்தளம் பகுதியில் நுகர்வோர் பாவனைக்குதவாத பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்கள் 16 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
புத்தளம்-மதவக்குளம் மற்றும் ஆடிகம பகுதிகளைச் சேர்ந்த 16 வர்த்தக நிலையங்களைச் சேர்ந்த 16 வர்த்தகர்களுக்கு எதிராகவே இவ்வாறு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் சுகாதார பரிசோதகர்களால் குறித்த வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் குறித்த வர்த்தக நிலையங்களில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பாவனைக்குதவாத உணவுப் பொருட்களையும் பறிமுதல் செய்து அவற்றை அழித்துள்ளதாக சுகாதார பரிசோதகர் திணைக்களம் தெரிவித்துள்ளது. .