
குருநாகல் – கஹட்டகஹா மைன் பைட் சுரங்க பணியாளர்கள் நேற்று மாலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் தமக்கு வழங்கப்படும் புத்தாண்டு கொடுப்பனவை இந்த வருடமும் வழங்கக் கோரி இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 60 சுரங்கப் பணியாளர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு வருடமும் 15,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டு வந்ததுடன் இந்த வருடம் அது வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த சுரங்கப் பணியில் 100 பணியாளர்கள் பணிபுரிவதோடு இவர்களுள் 60 பணியாளர்கள் மாத்திரமே இவ்வாறு போராட்டத்தில் குதித்துள்ளமை குறிழப்பிடத்தக்கது.