எதிர்வரும் சிங்கள- தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கொழும்பு உள்ளிட்ட நகரப் பகுதிகளில் நீர்வழங்கல் தடைப்படலாம் என்று நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை எச்சரித்துள்ளது.
நாட்டில் நிலவும் கடும் வரட்சியான காலநிலை காரணமாக நாட்டின் பெரும்பாலான நீர்த்தேக்கங்கள் வற்றிப் போயுள்ளன. இதன் காரணமாக நகரப் பகுதிகளுக்கான குடிநீர் வழங்கல் நடவடிக்கைகள் தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக எதிர்வரும் நாட்களுக்குள் போதுமான மழை பெய்யாதவிடத்து புத்தாண்டு சமயத்தில் குடிநீர் வழங்கலில் தடையேற்படும் என்று நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக கொழும்பு உள்ளிட்ட நகரப் பகுதிகளில் வாழும் மக்கள் ஏப்ரல் தொடக்கம் குடிநீர்ப் பற்றாக்குறை காரணமாக பெரும் அவதிக்குள்ளாக நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.