புத்தாண்டு கொண்டாட்டத்தில் சிவகார்த்திகேயன் ஸ்பெஷல்!

224

சிவகார்த்திகேயன் என்றாலே எல்லோருக்கும் செல்லப்பிள்ளை போல தான். அவர் டிவியில் வந்த நாள் முதல் சினிமாவில் இருக்கும் இந்த நாள் வரை ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே அவருக்கு இருக்கின்றது.

இந்த 2018 ல் அவருக்கு சீமராஜா படம் வெளியானது. பொன்ராம் இயக்கத்தில் வந்த இப்படத்தில் அவர் கடம்பவேல் ராஜா வேடத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க காமெடிக்கு சூரியும் இருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. ஆனாலும் வசூல் நல்ல முறையில் இருந்தது.

நாளை 2019 புத்தாண்டு வரப்போகிறது. டிவியிலும் ஸ்பெஷல் இருக்கும் தான். அந்த வகையில் சீமராஜா படத்தை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறார்களாம்.

 

SHARE