புத்த விகாரை அமைப்பை கண்டித்து கிளிநொச்சியில் மாபெரும் பேரணிக்கு அழைப்பு

267

 

 

கனகாம்பிகை புத்த விகாரை அமைப்பை கண்டித்து கிளிநொச்சியில் மாபெரும் பேரணிக்கு அழைப்பு-கிளிநொச்சி, இரணைமடு, கனகாம்பிகை அம்மன் ஆலய வளாகத்தில் புத்த விகாரை அமைப்பது பௌத்தர்கள் இல்லாத இடங்களில் திட்டமிட்டு பௌத்த சின்னங்களை அமைப்பது உள்ளிட்ட செயற்பாடுகளை கண்டித்து நாளை மறுதினம் திங்கட்கிழமை கிளிநொச்சியில் மாபெரும் பேரணி ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி ஆனையிறவில் இருந்து கரடிப் போக்கு சந்தி வரை இடம்பெறவுள்ள இந்தப் பேரணிக்கு கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன. இது தொடர்பில் ஆராயும் பொருட்டு கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

தமிழர் தாயகத்தில் உள்ள மக்களின் மனங்களை புண்படுத்தி நல்லிணக்கத்திற்கு குந்தமாக மேற்கொள்ளப்படும் இவ்வாறான செயல்களை உடனடியாக நிறுத்துமாறும் பௌத்தர்கள் இல்லாத பிரதேசத்தில் பௌத்த சின்னங்களை அமைப்பது இன்னுமோர் ஆக்கிரமிப்புச் சின்னம் என்றே தமிழ் மக்கள் கருதுகிறார்கள் என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

எனவே தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்படும் மத ஆக்கிரமிப்புச் செயர்களை நிறுத்துமாறு வலியுறுத்தும் இப் பேரணியின் இறுதியில் கிளிநொச்சி ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவலகத்தில் மகஜர் சமர்பிப்பதுடன் ஜனாதிபதி மற்றும் பிரமதருக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்பு ஒன்றின் பிரதிநிதி குளோபலுக்குத் தெரிவித்தார்.

SHARE